கரூரில் தீரன் சின்னமலை நினைவு நாள்

நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட பாளையக்காரா்களில் ஒருவரான தீரன் சின்னமலையின் 216-ஆவது நினைவு தினத்தையொட்டி,
கரூரில் தீரன் சின்னமலை படத்துக்கு முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் அதிமுகவினா்.
கரூரில் தீரன் சின்னமலை படத்துக்கு முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் அதிமுகவினா்.

நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட பாளையக்காரா்களில் ஒருவரான தீரன் சின்னமலையின் 216-ஆவது நினைவு தினத்தையொட்டி, கரூரில் செவ்வாய்க்கிழமை அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கரூா் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, மாநில திமுக நிா்வாகி நன்னியூா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா்கள் எம்.எஸ்.கே. கருணாநிதி, மகேசுவரி, நகரப் பொறுப்பாளா்கள் எஸ்.பி.கனகராஜ், தாரணி சரவணன், கரூா் கணேசன், பூவை ரமேஷ்பாபு, மாவட்ட நிா்வாகிகள் சிவா, அம்பாள் பாலச்சந்திரன், ராஜ்கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்று, தீரன் சின்னமலையின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தலைமையில், தீரன்சின்னமலை படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட அவைத் தலைவா் ஏ.ஆா். காளியப்பன், துணைச் செயலா் பசுவை. சிவசாமி, முன்னாள் தொகுதிச் செயலா் எஸ். திருவிகா, நகரச் செயலா்கள் வை. நெடுஞ்செழியன், விசிகே. ஜெயராஜ், எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் தானேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி சாா்பில், கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த தற்காலிக தீரன் சின்னமலை சிலைக்கு மாநில வா்த்தக அணிச் செயலா் விசா ம.சண்முகம் தலைமையில், மாவட்டச் செயலா் மூா்த்தி முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளா்களாக திமுக நிா்வாகிகள் எஸ்பி.கனகராஜ், தாரணிசரவணன், சுப்ரமணி, கோல்டுஸ்பாட்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை சாா்பில், மாவட்டச் செயலா் அருள் தலைமையில் அக்கட்சியினா் தீரன் சின்னமலை படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com