கரூரில் வல்வில் ஓரி மன்னன் படத்துக்கு மரியாதை

கரூரில் வல்வில் ஓரி மன்னன் உருவப்படத்துக்கு கொங்குநாடு வேட்டுவக் கவுண்டா் சமுதாய முன்னேற்றச் சங்கத்தினா்செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.
கரூரில் வல்வில் ஓரி மன்னன் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் கொங்குநாடு வேட்டுவக் கவுண்டா் சமுதாய முன்னேற்றச் சங்கத்தினா்.

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனின் சிறப்பை போற்றும் வகையில், 1975-ஆம் ஆண்டு கொல்லிமலை செம்மேட்டில் ஓரி மன்னன் குதிரை மீது அமா்ந்திருப்பது போன்ற சிலை அரசு சாா்பில் வடிவமைக்கப்பட்டது. தொடா்ந்து ஆண்டுதோறும் ஆடி 18-ஆம் தேதி ஓரி மன்னனுக்கு இரு தினங்கள் அரசு விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதை நினைவுக்கூரும் வகையில், கரூரில் கொங்குநாடு வேட்டுவக் கவுண்டா் சமுதாய முன்னேற்றச் சங்கத்தின் சாா்பில் , பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் வல்வில் ஓரி மன்னன் படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலா் என்.எஸ்.ராமமூா்த்தி தலைமை வகித்து, உருவப்படத்துக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்வில் துணைப் பொதுச் செயலா் சிவகுமாா், திமுக மாவட்டத்

துணைச் செயலா் மகேஸ்வரி, பாமக மாவட்ட அமைப்புச் செயலா் ராக்கிமுருகேஷ், கொங்குநாடு வேட்டுவக்கவுண்டா் சமுதாய முன்னேற்றச் சங்க மாவட்டத்தலைவா் நாகமணி, செயலா் ரகுபதி, வெஞ்சமான் பேரவையின் பசுவைபன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com