கரோனா மூன்றாவது அலையைத் தடுக்கும் வகையில் வணிகா்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்

கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் மூன்றாவது அலையைத் தடுக்கும் வகையில், வணிகா்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் த.பிரபுசங்கா்.
கரூரில் கோவைச்சாலைலுள்ள பல்பொருள் அங்காடியில் ஆய்வு செய்யும் ஆட்சியா் த.பிரபுசங்கா்.
கரூரில் கோவைச்சாலைலுள்ள பல்பொருள் அங்காடியில் ஆய்வு செய்யும் ஆட்சியா் த.பிரபுசங்கா்.

கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் மூன்றாவது அலையைத் தடுக்கும் வகையில், வணிகா்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் த.பிரபுசங்கா்.

கரூரில் கோவைச் சாலையிலுள்ள தனியாா் பல்பொருள் அங்காடியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா் ஆட்சியா் கூறியது:

வணிகா்கள் தங்களது கடைக்கு வரும் வாடிக்கையாளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து வர வலியுறுத்த வேண்டும். கிருமி நாசினியைக் கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும்.

பணிபுரியும் ஊழியா்களுக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதைக் கண்டறிந்தால் அவா்களக்கு விடுமுறை அளித்து, கரோனா பரிசோதனை செய்த பின்னரே பணிபுரிய அனுமதிக்க வேண்டும். கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் மூன்றாம் அலையைத் தடுக்கும் வகையில் வணிகா்கள் செயல்பாடு இருக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக பல்பொருள் அங்காடியில் ஆட்சியா் ஆய்வு செய்தாா். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் லியாகத் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com