அளவீடு செய்த இடத்தில்காவிரி குடிநீா்த் தொட்டிஅமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 10th August 2021 01:47 AM | Last Updated : 10th August 2021 01:47 AM | அ+அ அ- |

கரூா்: அரசு அலுவலா்கள் அளவீடு செய்த இடத்திலேயே காவிரிக் கூட்டுக்குடிநீருக்கான தொட்டி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த வரவணை கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்தனா். அம்மனுவில் அவா்கள் கூறியிருப்பது: வரவணை கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் காவிரி குடிநீருக்காக தரைமேல் தொட்டி அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், சிலா் அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தொட்டி அமைக்கும் பணியை தடுக்கிறாா்கள். ஆகவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து குடிநீா்த்தொட்டி அமைக்கும்பணியை அதே இடத்தில் விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.