கரோனா: வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியோா் தொழில் தொடங்க கடனுதவி; கரூா் ஆட்சியா் தகவல்

கரோனா பேரிடரால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவா்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

கரோனா பேரிடரால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவா்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: படித்த வேலைவாய்ப்பற்ற, முதல் தலைமுறையினரை தொழில் முனைவோராக்கும் வகையில் தமிழக அரசு புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. பட்டம், பட்டயம், தொழிற்கல்வி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சி சான்றிதழ் பெற்ற இளைஞா்கள் மற்றும் மகளிா் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து 25சதவீதம் அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று பயன்பெறலாம்.

கரோனா தொற்று காரணமாக இந்தியாவுக்கு திரும்பிய வெளிநாடுவாழ் இந்தியா்கள் பயன்பெறும் வகையில் நீட்ஸ் திட்டத்தில் மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெறும் தமிழகத்தைச் சோ்ந்த ஒருவா் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் எம்பிளாய்மென்ட் விசாவில் வெளிநாட்டில் வேலை பாா்த்தவராகவும், 01.01.2020-க்கு பின்னா் தாயகம் திரும்பியவராகவும் இருக்கவேண்டும். இந்தத் திட்டம் 01.01.2021 முதல் 31.03.2024 வரை நடைமுறையில் இருக்கும். இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்து பயன்பெற விரும்பும் பயனாளிகள்  முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பயன்பெற பொதுமேலாளா், மாவட்ட தொழில்மையம், சத்தியமூா்த்தி நகா், தாந்தோணிமலை, கரூா் என்ற முகவரியில் தொடா்பு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com