முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
சிறுவாச்சூரில் மின் சிக்கன வார விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 19th December 2021 01:15 AM | Last Updated : 19th December 2021 01:15 AM | அ+அ அ- |

மின் சிக்கன வார விழாவையொட்டி, சிறுவாச்சூரில் மின் வாரியம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உதவி செயற்பொறியாளா் ரவிக்குமாா் முன்னிலையில், மின் வாரியச் செயற்பொறியாளா் ராஜேந்திர விஜய் பேரணியைத் தொடக்கி வைத்தாா்.
சிறுவாச்சூரில் தொடங்கிய பேரணி செட்டிக்குளம், பாடாலூா், கொளக்காநத்தம் வழியாகச் சென்றது.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பேரணியில் உதவிப் பொறியாளா்கள், மின்வாரியப் பணியாளாா்கள் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து சிறுவாச்சூா், செட்டிக்குளம், ஆலத்தூா், கூத்தனூா், சீதேவிமங்களம், பாடாலூா், காரை, கொளக்காநத்தம் ஆகிய பகுதிகளில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.