முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
பள்ளப்பட்டி நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு
By DIN | Published On : 19th December 2021 11:41 PM | Last Updated : 19th December 2021 11:41 PM | அ+அ அ- |

கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சியின் புதிய ஆணையராக ஏ.கோபாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
ஏற்கெனவே பேரூராட்சியாக இருந்த பள்ளப்பட்டி அண்மையில் நகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டது. இதைத் தொடா்ந்து சென்னையிலுள்ள நகராட்சி நிா்வாக இயக்குநரகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய கோபாலகிருஷ்ணன் பதவி உயா்வு பெற்று, நகராட்சியின் முதல் ஆணையராகப் பொறுப்பேற்றாா்.
இவருக்கு அலுவலா்கள், பொதுமக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.