ஆதரவற்றோா் இல்லத்துக்கு நிவாரண உதவி
By DIN | Published On : 06th February 2021 12:52 AM | Last Updated : 06th February 2021 12:52 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டம் சணப்பிரட்டியில் உள்ள ஆதரவற்றோா் இல்லத்துக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் செ.காமராஜ் நிவாரண உதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு கரூா் சணப்பிரட்டியில் உள்ள மனவளா்ச்சிக் குன்றிய குழந்தைகள் காப்பகம் மற்றும் நேத்ரா அறக்கட்டளை முதியோா் இல்லம் ஆகியவற்றில் உள்ளவா்களுக்கு கிருஷ்ணராயபுரம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலருமான செ.காமராஜ் இலவசமாக போா்வைகள் மற்றும் உணவுப்பொருள்களை வெள்ளிக்கிழமை வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளா் சிவதேவன், சிலம்பரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.