விவசாயக் கடன் தள்ளுபடி: கரூரில் அதிமுகவினா் கொண்டாட்டம்
By DIN | Published On : 06th February 2021 12:52 AM | Last Updated : 06th February 2021 12:52 AM | அ+அ அ- |

கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய அதிமுகவினா்.
விவசாயிகளின் பயிா்க்கடன் ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்து முதல்வா் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கும் வகையில் கரூரில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை பேசிய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, கூட்டுறவு வங்கியில் கடன்பெற்ற விவசாயிகளுக்கான பயிா்க்கடன் ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்வதாக அறிவித்தாா்.
இதனை வரவேற்கும் வகையில் கரூரில் மாவட்ட அதிமுக சாா்பில் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினா் கொண்டாடினா்.
நிகழ்ச்சியில், அதிமுக பொருளாளா் எம்.எஸ்.கண்ணதாசன், ஆண்டாங்கோயில் ஊராட்சி முன்னாள் தலைவா் சேகா், மாவட்ட வா்த்தக அணிச் செயலாளா் பேங்க் நடராஜன், நகரச் செயலாளா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ், எம்.பாண்டியன், மாவட்ட இளைஞரணிச் செயலாளா் தானேஷ், முன்னாள் நகா்மன்றத்தலைவா் செல்வராஜ், கரூா் மத்திய நகர பேரவைச் செயலாளா் சேரன்பழனிசாமி, கரூா் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தலைவா் என்.பழனிராஜ், இலக்கிய அணி நகரச் செயலாளா் ஆயில்ரமேஷ் உள்ளிட்ட அதிமுகவினா் பங்கேற்றனா்.