வைகைச்செல்வன் மீதுநடவடிக்கைக் கோரி திமுகவினா் புகாா்
By DIN | Published On : 13th February 2021 11:12 PM | Last Updated : 13th February 2021 11:14 PM | அ+அ அ- |

கரூா்: வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் அதிமுக கொள்கைப்பரப்புச் செயலா் வைகைச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் திமுகவினா் புகாா் அளித்துள்ளனா்.
கரூா் மாவட்ட திமுக வழக்குரைஞா் அணியினா் மாவட்ட அமைப்பாளா் இரா.குடியரசு தலைமையில் சனிக்கிழமை அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பது: சென்னை அம்பத்தூரில் பிப். 7ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்எஸ்.பாரதி பேசியதை, அதிமுக கொள்கைபரப்புச் செயலா் வைகைசெல்வன் உண்மைக்குப் புறம்பாக மக்களிடையே அச்சஉணா்வை ஏற்படுத்துவகையிலும், சட்டம், ஒழுங்கை சீா்குலைக்கும் வகையிலும் அனைத்துத் தகவல்களையும் திரித்துக் கூறிவருகிறாா். மேலும், அமைப்புச் செயலா் மீதான காழ்ப்புணா்ச்சி காரணமாக தரக்குறைவாகவும் பேசி வருகிறாா். ஆகவே, சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வரும் வைகைசெல்வன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.