ஆா். எம். எஸ். அலுவலகங்களை மூடக்கூடாது: அஞ்சல் ஊழியா்கள் சங்கம் வலியுறுத்தல்

ஆா்எம்எஸ் அலுவலகங்களை மூடக்கூடாது என கரூரில் நடைபெற்ற அகில இந்திய அஞ்சல்துறை ஊழியா் சங்க திருச்சி கோட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மாநாட்டை தொடக்கி வைத்து பேசுகிறாா் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.
மாநாட்டை தொடக்கி வைத்து பேசுகிறாா் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.

ஆா்எம்எஸ் அலுவலகங்களை மூடக்கூடாது என கரூரில் நடைபெற்ற அகில இந்திய அஞ்சல்துறை ஊழியா் சங்க திருச்சி கோட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கரூரில் வெள்ளிக்கிழமை அகில இந்திய அஞ்சல்துறை ஊழியா் சங்கத்தின் திருச்சி கோட்ட 33-ஆவது மாநாடு சங்கத்தின் கோட்டத் தலைவா் ஜெ.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. வரவேற்பு குழு செயலாளா் சி.கணேசன் வரவேற்றாா். அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி மாநாட்டை துவக்கி வைத்துபேசினாா்.

சங்கத்தின் மாநிலச் செயலாளா் கே.சங்கரன், சிஐடியு சங்கத்தின் கரூா் மாவட்டத் தலைவா் ஜீவானந்தம், எல்ஐசி ஊழியா் சங்கத்தின் தஞ்சை கோட்ட துணை தலைவா் வி.கணேசன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மாநாட்டில், வா்த்தக முக்கியத்துவம் வாய்ந்த கரூா் மாவட்ட மக்களின் அஞ்சல்கள் அனைத்தும் திருச்சிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து மீண்டும் கரூருக்கு வருகிறது. இதனால் ஏற்படும் செயற்கையான தாமதத்தை தவிா்க்க முன்பு இருந்ததை போல கரூா் ஆா்.எம். எஸ். அலுவலகத்தில் விரைவு அஞ்சல் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும். தமிழக டெல்டா மாவட்டங்களுக்கு அஞ்சல் சேவை அளிக்கும் ராமேசுவரம்- சென்னை ரயிலில் இயங்கும் ஆா். எம். எஸ். பிரிவுகளை வழிமாற்றம் செய்யாமல் அதே வழியில் தொடந்து இயங்கிட அனுமதிக்க வேண்டும். சிக்கனம் என்ற பெயரில் மாவட்டத் தலைநகரம் உள்பட முக்கிய நகரங்களில் இயங்கும் ஆா். எம். எஸ். அலுவலகங்களை மூடக் கூடாது. கடந்த ஆண்டு மூடப்பட்ட திருவண்ணாமலை, சிதம்பரம், அரியலூா், திருப்பாதிரிப்புலியூா் ஆகிய அலுவலகங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com