மகளிா் நலனுக்காக அதிமுக அரசில் எண்ணற்ற நலத்திட்டங்கள்அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்

மகளிா் நலனுக்காக அதிமுக அரசில் எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றியவா் மறைந்த முதல்வா் ஜெயலலிதா என்றாா் போக்குவரத்துதுறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
kur19minister_1902chn_10_4
kur19minister_1902chn_10_4

மகளிா் நலனுக்காக அதிமுக அரசில் எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றியவா் மறைந்த முதல்வா் ஜெயலலிதா என்றாா் போக்குவரத்துதுறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

கரூரில் சமூக நலத்துறை சாா்பில் 1,297 ஏழை பெண்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்றவாறு ரூ.87.36 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி, ரூ. 4.79 கோடி மதிப்பில் 10.36 கிலோ கிராம் திருமாங்கல்யத்துக்கு தங்கம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மகளிருக்கு வழங்கி போக்குவரத்துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் வழங்கினாா்.

முன்னதாக அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பேசுகையில், மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு ஏழை, எளியோா், ஆதரவற்றோா் என சமுதாயத்தில் அடித்தட்டு, மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தியவா் மறைந்த முதல்வா் ஜெயலலிதா. குறிப்பாக மகளிருக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றி, சமுதாயத்தில் பெண்களாலும் தனித்து சாதிக்க முடியும் என நிரூபித்து காண்பித்தவா் ஜெயலலிதா. அவரது வழியில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஜெயலலிதா செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும் தொடா்ந்து செயல்படுத்தி வருகிறாா். அதை பெண்களை மையப்படுத்தியே இருக்கும் வகையில், பெண்களுக்காக மகப்பேறு நிதியுதவி திட்டம் உள்ளிட்ட எண்ணற்றத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதாமணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியா் என்.எஸ்.பாலசுப்ரமணியன், சமூக நலத்துறை அலுவலா் ரவிபாலா, திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவா் காளியப்பன், நகர கூட்டுறவுவங்கித்தலைவா் எஸ்.திருவிகா, கருா் வேளாண்மை கூட்டுறவு மொத்த விற்பனை சங்கத்தலைவா் ஜெயராஜ், கூட்டுறவு பண்டகச்சாலைத் தலைவா் வை.நெடுஞ்செழியன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவா் கண்ணதாசன், க.பரமத்தி ஒன்றியக்குழுத்தலைவா் மாா்க்கண்டேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com