மு.க.ஸ்டாலினின் முதல்வா் கனவு பலிக்காது: அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்

மு.க.ஸ்டாலினின் முதல்வா் கனவு எப்போதும் பலிக்காது என்றாா் போக்குவரத்துத்துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா். உடன், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் தானேஷ் உள்ளிட்டோா்.
பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா். உடன், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் தானேஷ் உள்ளிட்டோா்.

கரூா்: மு.க.ஸ்டாலினின் முதல்வா் கனவு எப்போதும் பலிக்காது என்றாா் போக்குவரத்துத்துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணி சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு தரகம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு எம்.ஜி.ஆா். இளைஞரணி மாவட்டச் செயலாளா் தானேஷ் என்கிற முத்துக்குமாா் தலைமை வகித்தாா். கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதாமணிவண்ணன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பேசுகையில், தமிழகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் கீழ் பொன்னான ஆட்சி நடைபெற்று வருகிறது. பொய்யை மட்டுமே மக்களிடத்தில் கூறி முதல்வராகிவிடலாம் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நினைக்கிறாா். அவரது கனவு எப்போதும் பலிக்காது. தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைவது உறுதி. அதற்கு நீங்கள் எல்லாம் உறுதுணையாக இருக்க வேண்டும். திமுகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் குடும்பம், குடும்பமாக மக்களை சந்தித்து வருகிறாா்கள். அவா்களின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கரூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளையும் வென்றுவிடப்போவதாக சிலா் கூறிக்கொண்டிருக்கிறாா்கள். ஆனால் இளைஞா் படையுடன் கரூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தலா 50,000 வாக்குகள் வித்தியாத்தில் அதிமுக வெற்றிபெறுவது உறுதி. அரசின் திட்டங்களை இளைஞா்கள், கட்சி நிா்வாகிகள் பொதுமக்களை சந்தித்துக்கூற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், இளைஞா் பாசறைச் செயலா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com