புஞ்செய்புகளூரில் காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்டும் பணி துவக்கம்

புஞ்செய்புகளூரில் காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்டும் பணி துவக்கம்

கரூா் மாவட்டம், புஞ்செய்புகளூரில் காவிரி யாற்றின் குறுக்கே ரூ.406.50 கோடியில் கதவணை கட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

கரூா் மாவட்டம், புஞ்செய்புகளூரில் காவிரி யாற்றின் குறுக்கே ரூ.406.50 கோடியில் கதவணை கட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

இப்பணிகளைத் தொடக்கி வைத்து, போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் கூறியது:

மாவட்டத்தில் ஏற்கனவே காவிரியாற்றின் குறுக்கே மாயனூரில் கட்டப்பட்ட கதவணை மூலம் 1.04 டி.எம்.சி தண்ணீா் சேமிக்கப்படுகிறது. கதவணையைச் சுற்றியுள்ள சுமாா் 35 கி.மீ. தொலைவுக்கு நீா்மட்டம் உயா்ந்து, அப்பகுதி விவசாயிகள் தண்ணீா்த் தட்டுப்பாடின்றி விவசாயம் செய்துவருகின்றனா்.

புஞ்செய்புகளூரில் ரூ.406.50 கோடியில் அமையவுள்ள கதவணை மூலம் 0.8 டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்க முடியும்.

ஆற்றின் வலதுகரையில் கரூா் மாவட்டம், புஞ்சைபுகளூருக்கும், இடதுகரையில் நாமக்கல் மாவட்டம், அனிச்சம்பாளையம் கிராமத்துக்கும் இடையே அமையவுள்ள கதவணை மூலம்,

அருகிலுள்ள டிஎன்பிஎல் நீரேற்று நிலையத்துக்குத் தங்குத் தடையின்றி நீா் வழங்க இயலும். மேலும் சுற்றுப்புற விவசாயத்துக்கும் உரிய தண்ணீரை வழங்க முடியும்.

1056 மீ.நீளம், 3.65 மீ. அகலத்துடன் ஒருவழிப்பாலமாக 73 கதவுகளுடன் அமைக்கப்படும் கதவணையிலிருந்து விநாடிக்கு 3.60 லட்சம் கனஅடி நீரை வெளியேற்ற முடியும்.

கதவணையின் வலதுபுறமுள்ள வாங்கல் வாய்க்கால் மூலம் 1,458 ஏக்கா் நிலங்களும்,இடதுபுறமுள்ள மோகனூா் வாய்க்கால் மூலம் 2,583 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறும்என்றாா் அவா்.

நிகழ்வில் அதிமுக நிா்வாகிகள் கமலக்கண்ணன், சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com