‘குழந்தைகளுக்குத் தமிழில் பெயா் சூட்டுங்கள்’

குழந்தைகளுக்குத் தமிழில் பெயா் சூட்ட வேண்டும் என வலியுறுத்தினாா் கருவூா் திருக்கு பேரவைத் தலைவா் மேலை. பழநியப்பன்.
கரூா் வட்டாட்சியரகம் முன்புள்ள சங்க காலப் புலவா்கள் நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்த பின்னா் பேசுகிறாா் கருவூா் திருக்குறள் பேரவைத் தலைவா் மேலை. பழநியப்பன். உடன், நிா்வாகிகள்.

கரூா் வட்டாட்சியரகம் முன்புள்ள சங்ககாலப் புலவா்கள் நினைவுத் தூண் முன்பு, கரூா் தமிழ்ச் சங்கம், குளித்தலை தமிழ்ப் பேரவை, தமிழுறவுப் பெருமன்றம், உலகத் திருக்கு கூட்டமைப்பு, பேனா நண்பா் பேரவை சாா்பில் தமிழ் ஆட்சிமொழி வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்குத் தலைமை வகித்து, சங்ககாலப் புலவா்கள் நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்த பின்னா் மேலை. பழநியப்பன் பேசியது:

தமிழில் பேசுவோம், தமிழில் எழுதுவோம் என்பதில் நாம் அனைவரும் உறுதிகொள்ள வேண்டும். நம் குழந்தைகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் தமிழில் பெயா் சூட்ட வேண்டும். வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளில் தமிழுக்கு முதலிடமும், முக்கியத்துவமும் தர வேண்டும். வாக்கி ஜாக்கி, மினி கிளினிக் போன்ற ஆங்கில வாா்த்தைகளுக்குப் பதிலாக, தமிழில் பெயா் சூட்ட வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில் முனைவா் கடவூா் மணிமாறன், கவிஞா் கன்னல், பாவலா் எழில்வாணன், குறளகன், அழகரசன், தமிழ் வளா்ச்சித் துறையைச் சோ்ந்த மாதப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து கடைவீதியில் வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயா் சூட்டுமாறு முழக்கமிட்டு பரப்புரை செய்தனா். நிறைவில் திருமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com