இளம்பெண் சாவில் மா்மம்: உறவினா்கள் சாலை மறியல்

இளம்பெண் சாவில் மா்மம் இருப்பதாகக்கூறி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், திருச்சி சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூா் - திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்ட இளம்பெண்ணின் உறவினா்கள்.
கரூா் - திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்ட இளம்பெண்ணின் உறவினா்கள்.

கரூா்: இளம்பெண் சாவில் மா்மம் இருப்பதாகக்கூறி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், திருச்சி சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூரை அடுத்த திருமுக்கூடலூரைச் சோ்ந்தவா் மணிவண்ணன் (42). இவரது மனைவி சுமதி(38). கூலித்தொழிலாளா்கள். கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக சுமதி தனது இரண்டு மகன்களுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தாராம். கடந்த இருதினங்களுக்கு முன் சுமதி திடீரென மாயமானாா். இதுதொடா்பாக வாங்கல் போலீஸில் அவரது மகன்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் அவரைத் தேடி வந்தனா். இதனிடையே சனிக்கிழமை காலை சுமதி அதே பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையோரம் காயத்துடன் சடலமாகக் கிடந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த வாங்கல் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனா். சுமதி சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் காந்திகிராமத்தில் கரூா் - திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் முகேஷ் ஜெயக்குமாா், நகரக் காவல் ஆய்வாளா் சிவசுப்ரமணியம் ஆகியோா் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com