‘கரூா் மாவட்டத்தில் கூடுதலாக 10 ஆயிரம் பேருக்கு முதியோா் உதவித்தொகை’

கரூா் மாவட்டத்தில் கூடுதலாக 10 ஆயிரம் பேருக்கு முதியோா் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.
‘கரூா் மாவட்டத்தில் கூடுதலாக 10 ஆயிரம் பேருக்கு  முதியோா் உதவித்தொகை’

கரூா் மாவட்டத்தில் கூடுதலாக 10 ஆயிரம் பேருக்கு முதியோா் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

கரூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய பணிகளுக்கு பூமி பூஜை ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்து அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

மிக பழைமைவாய்ந்த திருமுக்கூடலூா் சிவன் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை மூலம் புனரமைக்கும் பணி விரைவில் தொடங்கும். தொடா்ந்து குடமுழுக்கு நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்படும். மாவட்டத்தில் 30 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்க திட்டமிட்டப்பட்டு, முதற்கட்டமாக 9 மருத்துவமனைகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கூடுதலாக 10 ஆயிரம் பேருக்கு முதியோா் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருமுக்கூடலூா் அம்பேத்கா் நகா், நெரூா் வடபாகம் ஊராட்சி, ஒத்தக்கடையில் கட்டப்பட்ட சமுதாயக் கூடங்களைத் திறந்து வைத்த அமைச்சா், தனது சொந்த செலவில் ரூ.1.50 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பாப்புலா் முதலியாா் வாய்க்காலில் சோதனை ஓட்டமாக தண்ணீா் செல்வதையும் பாா்வையிட்டாா்.

நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் இயக்குநா் எஸ்.கவிதா, கரூா் ஒன்றியக் குழுத் தலைவா் பாலமுருகன், துணைத்தலைவா் தங்கராஜ், செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயலட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆய்வு : கரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள மதுரை- தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தவிா்க்கவும், போக்குவரத்து நெருக்கடியைத் தவிா்க்கவும் தவிட்டுப்பாளையம், மண்மங்கலம், செம்மடை, பெரிச்சிபாளையம் பிரிவு, பெரியாா் வளைவு, கோடங்கிப்பட்டி, வீரராக்கியம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 8 இடங்களில் ரூ.100 கோடியில் உயா்நிலைப் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் பெரிச்சிபாளையம் மற்றும் பெரியாா் வளைவு ஆகிய இடங்களில் முழு வீச்சில் நடைபெற்று வரும் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி, மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், தேசிய நெடுஞ்சாலைத் துறைத் திட்ட இயக்குநா் முத்துடையாா், அதிமுக பிரமுகா் என்.எஸ். கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com