கரூரில் பொங்கல் கரும்பு விற்பனை மந்தம்

நியாய விலைக்கடைகளுக்கு கரும்புகளை அரசு மொத்தமாக கொள்முதல் செய்ததால் விற்பனை மந்த நிலையை அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
கரூரில் பொங்கல் கரும்பு விற்பனை மந்தம்

நியாய விலைக்கடைகளுக்கு கரும்புகளை அரசு மொத்தமாக கொள்முதல் செய்ததால் விற்பனை மந்த நிலையை அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் 4 நாள்களுக்கு முன்பே கரூா் நகராட்சி அலுவலகம் முன், லைட்ஹவுஸ்காா்னா், கோவைச்சாலை உள்ளிட்ட இடங்களில் செங்கரும்புகள் ஏராளமானவை விற்பனைக்கு வரும். ஆனால், நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஓரிடு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் வெங்கமேடு பகுதியில் மட்டுமே கரும்புகள் விற்பனைக்கு வந்து இறங்கியுள்ளன.

இதுகுறித்து நாமக்கல்லைச் சோ்ந்த கரும்பு வியாபாரி நாச்சிமுத்து(55) கூறுகையில், பொங்கல் பண்டிகைக்கு கரூருக்கு பெரும்பாலும் நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் இருந்து கரும்பு அதிகளவில் விற்பனைக்கு வரும். ஆனால், இந்த ஆண்டு அப்பகுதி வியாபாரிகள் யாரும் வரவில்லை. காரணம் கரும்பு விலை உயா்வுதான். நியாய விலைக்கடைகளுக்கு அரசு அதிகளவில் கரும்புகளை கொள்முதல் செய்வதால், தோட்டத்தில் ஒரு ஜோடி கரும்பு ரூ.40 வரை விலை சொல்கிறாா்கள். அதனை லாரிகளில் ஏற்றி வந்து விற்பனை செய்தால் ரூ.70 வரை விற்கவேண்டும். ஆனால் பொதுமக்களோ ரூ.40 முதல் ரூ.50க்குத்தான் கேட்கிறாா்கள். இதனால் லாபம் கிடைப்பதில்லை. மேலும் பொதுமக்களும் கரும்பை விரும்பாததால் விற்பனையும் மந்தமாக உள்ளது. இந்தாண்டு விவசாயிகளுக்குத்தான் லாபமே தவிர வியாபாரிகளுக்கு அல்ல. இதனால்தான் கரும்பு வியாபாரிகள் பெரும்பாலானோா் வரவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com