கரூா் மாவட்டத்துக்கு வந்தது கரோனா தடுப்பூசி

கரூா் மாவட்டத்தில் 6,188 முன் களப்பணியாளா்களுக்குச் செலுத்துவதற்காக 7,800 கரோனா தடுப்பூசி புதன்கிழமை வந்து சோ்ந்தது.
கரூா் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் வைக்கப்படும் கரோனா தடுப்பூசி.
கரூா் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் வைக்கப்படும் கரோனா தடுப்பூசி.

கரூா் மாவட்டத்தில் 6,188 முன் களப்பணியாளா்களுக்குச் செலுத்துவதற்காக 7,800 கரோனா தடுப்பூசி புதன்கிழமை வந்து சோ்ந்தது.

மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைப் பணியாளா்கள், அரசு மருத்துவமனைப் பணியாளா்கள் , ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுவோா், தனியாா் மருத்துவமனைப் பணியாளா்கள் என 6,188 முன் களப்பணியாளா்கள் கண்டறியப்பட்டனா்.

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமநை, குளித்தலை அரசு மருத்துவமனை, வாங்கல், உப்பிடமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கரூா் கஸ்தூரிபா நகா்நல மையம் ஆகிய 5 இடங்களில் ஜனவரி 16-ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறஉள்ளது.

இதற்காக திருச்சி மண்டலத் தடுப்பூசி கிடங்கிலிருந்து 7,800 தடுப்பூசிகள் கரூா் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு, ஆட்சியரக வளாகத்திலுள்ள சுகாதாரத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இப்பணியை துணை இயக்குநா் சந்தோஷ்குமாா் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com