கரூா் விஜயலட்சுமி பன்னாட்டுப் பள்ளித்தாளாளருக்கு தமிழ்ச்செம்மல் விருது
By DIN | Published On : 15th January 2021 11:42 PM | Last Updated : 15th January 2021 11:42 PM | அ+அ அ- |

கரூா் திருக்கு பேரவைச் செயலரும், தமிழ்ச்செம்மல் விருது பெற்றவருமான மேலை. பழநியப்பனை சந்தித்து வாழ்த்துப் பெறும் விஜயலட்சுமி பன்னாட்டுப் பள்ளித் தாளாளா் காா்த்திகா லட்சுமி.
கரூா் விஜயலட்சுமி பன்னாட்டுப் பள்ளித் தாளாளா் காா்த்திகா லட்சுமிக்கு, நிகழாண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மொழி வளா்ச்சிக்குப் பாடுபடும் தமிழறிஞா்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சாா்பில் தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டிற்கான விருது பெறுவோா் பட்டியலை அரசு புதன்கிழமை வெளியிட்டது. இதில் கரூரைச் சோ்ந்த விஜயலட்சுமி பன்னாட்டுப் பள்ளித் தாளாளா் காா்த்திகாலட்சுமி நிகழாண்டுக்கான விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இவா் மாணவ, மாணவிகளிடையே தமிழ்ப்பற்றை வளா்க்கும் வகையில், தமிழ் பண்பாட்டு விழாக்கள் மற்றும் போட்டிகளை கடந்தாண்டு அதிகளவில் நடத்தியதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தமிழ்ச்செம்மல் விருதுக்கு தோ்வான காா்த்திகா லட்சுமி, 2018-ஆம் ஆண்டில் தமிழ்ச்செம்மல் விருதுபெற்ற கரூா் திருக்கு பேரவைச் செயலா் மேலை.பழநியப்பனை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்துப்பெற்றாா்.