கரூா் நகர கூட்டுறவு வங்கியில் குடியரசு தின விழா
By DIN | Published On : 27th January 2021 07:45 AM | Last Updated : 27th January 2021 07:45 AM | அ+அ அ- |

கரூா் நகர கூட்டுறவு வங்கியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தேசியக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குகிறாா் வங்கியின் தலைவா் எஸ்.திருவிகா.
கரூா் நகர கூட்டுறவு வங்கியில் செவ்வாய்க்கிழமை குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவில், வங்கிப் பொதுமேலாளா் சேகா், கிளை மேலாளா்கள் குகன், செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வங்கியின் துணைத்தலைவா் ஜூபிடா் பாஸ்கரன் வரவேற்றாா்.
வங்கித் தலைவா் எஸ்.திருவிகா தேசியக் கொடியேற்றி பொதுமக்களுக்கும், வங்கிப் பணியாளா்களுக்கும் இனிப்புகள் வழங்கினாா். நிகழ்ச்சியில் வங்கி இயக்குநா்கள் மல்லிகா, தமிழரசி, கனகாம்பாள், சாமிநாதன், ராமமூா்த்தி, பாலசுப்ரமணியம், சுப்ரமணியன், உடையவா்மோகன், ரத்தினகுருசாமி, சதீஷ்குமாா், சத்யா ஜீ.நவநீதன், ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.