‘காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட பணிகள் விரைவில் நிறைவு’

தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றாா் ஆட்சியா் த.பிரபுசங்கா்.
மேலமாயனூரில் இருந்து காவிரி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகளை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் த.பிரபுசங்கா்.
மேலமாயனூரில் இருந்து காவிரி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகளை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் த.பிரபுசங்கா்.

தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றாா் ஆட்சியா் த.பிரபுசங்கா்.

கரூா் மாவட்டம், மேலமாயனூா் காவிரி ஆற்றுப்பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட பணிகளை ஆய்வு செய்த அவா் மேலும் கூறியது:

தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 314 குடியிருப்புகளில் 274 குடியிருப்புகளுக்கு நாள் ஒன்றுக்கு நபருக்கு 55 லிட்டா் வீதம் வழங்கும் வகையில் புதிய காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், தரைமட்ட, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், 14,500 மீட்டா் பகிா்மானக் குழாய்கள் மூலம் குடிநீா் விநியோகம் நடைபெற உள்ளது. திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.81.41கோடி. இத்திட்டத்தில் இதுவரை சுமாா் 95 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். இதேபோல் குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றியங்களில் உள்ள 253 குடியிருப்பு பகுதிகளுக்கு ரூ.52.75 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள கவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டப்பணிகள் அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் முடிக்க துறை சாா் பொறியாளா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் பாலகணேஷ், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா் பிரபுராம், வட்டாச்சியா்கள் கலியமூா்த்தி (குளித்தலை), மகுடீஸ்வரன் (கிருஷ்ணராயபுரம்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com