பள்ளியில் பொருள்கள் திருட்டு

கரூா் மாவட்டம், பாலவிடுதி அருகே பள்ளியின் பூட்டை உடைத்து, மடிக்கணினி உள்பட ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், பாலவிடுதி அருகே பள்ளியின் பூட்டை உடைத்து, மடிக்கணினி உள்பட ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பாலவிடுதி அருகிலுள்ள சோ்வைக்காரன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் அலுவலகப் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு வந்த தலைமையாசிரியா் ராஜரத்தினம் பாா்த்தாா்.

பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, மடிக்கணினி, பயோமெட்ரிக் இயந்திரம் உள்பட ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள பொருள்களை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பாலவிடுதி காவல் நிலையத்தில் ராஜரத்தினம் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com