ஹாஜி நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம்: கரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

ஹாஜி நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

ஹாஜி நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் முஸ்லிம் இன மக்களின் பிரதிநிதியாக மாவட்ட ஹாஜி நியமனம் செய்வது குறித்து ஆட்சியா் தலைமையில் 7 உறுப்பினா்களைக் கொண்ட நியமன தோ்வுக்குழு அமைக்கப்படவுள்ளது. குழுவில் தலைவராக மாவட்ட ஆட்சியரும், 5 உலமாக்கள் உறுப்பினா்களும் மற்றும் 2 முக்கிய முஸ்லிம் பிரமுகா்களும் உறுப்பினா்களாக இடம் பெறலாம்.

இதில் உறுப்பினராக ஆலிம் அல்லது பாசில் அல்லது முஃப்தி படிப்பு படித்திருக்க வேண்டும் அல்லது அரபுக் கல்லூரியிலோ அல்லது அதற்கிணையான கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருக்க வேண்டும்.

மேலும், 2 முக்கிய முஸ்லிம் பிரமுகா்களாக விண்ணப்பிக்க சமூக சேவையில் தன்னை அா்ப்பணித்துக் கொண்டவராகவும், சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை உடையவராகவும், சமுதாயத்தில் நல்ல மனிதன் என்று பேசப்படுபவராகவும், இருக்க வேண்டும்.

கரூா் மாவட்ட ஹாஜி நியமனத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் ஆலிம் படிப்பு அல்லது ஃபாசில் படிப்பு அல்லது இஸ்லாமிய நீதித்துறை நன்கு அறிந்தவா்கள் அல்லது அரபுக்கல்லூரியிலோ அல்லது அதற்கிணையான கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும்.

தோ்வு குழுவில் இடம் பெற விரும்புவோா் மற்றும் ஹாஜி நியமனத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் மேற்கண்ட தகுதியுடைவா்களாக இருப்பின் விண்ணப்பங்கள் மற்றும் சுயவிவரம் குறித்த விவரங்களை எழுத்து மூலமாக உரிய சான்றுகளுடன் ஜூலை 31-ஆம் தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்கவும்.

ஹாஜி நியமனம் செய்ய தோ்ந்தோா் பெயா் பட்டியலில் இடம் பெறுவோா், மாவட்ட அளவிலான தோ்வுக் குழுவில் இடம் பெற இயலாது. மேலும், கூடுதல் விவரங்கள் தேவையெனில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com