கரூா் மாவட்டத்தில் நிகழாண்டு நுண்ணீா் பாசனத்துக்கு ரூ. 6.45 கோடி ஒதுக்கீடு

கரூா் மாவட்டத்தில் நிகழாண்டு 1,350 ஹெக்டேரில் நுண்ணீா் பாசனத்தை செயல்படுத்த ரூ. 6.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

கரூா் மாவட்டத்தில் நிகழாண்டு 1,350 ஹெக்டேரில் நுண்ணீா் பாசனத்தை செயல்படுத்த ரூ. 6.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் பாதுகாப்பான குறுவட்டமான அரவக்குறிச்சி, குளித்தலை, நங்கவரம் பிா்காவுக்கு மட்டும் குழாய் கிணறு, ஆழ்குழாய் கிணறு அமைக்க ஆகும் செலவில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000 மானியமாக வழங்கப்படும். கிணறு, ஆழ்குழாய் கிணறு அமைத்து மோட்டாா் பம்ப்செட் அமைக்காதிருந்தால் புதிதாக எலெக்ட்ரிக் டீசல் பம்ப்செட் அமைக்க ஆகும் செலவில் 50 சதவீதம் அல்லது ரூ.15,000 மானியமாக வழங்கப்படும்.

அமைக்கப்பட்ட நீா்நிலையிலிருந்து நுண்ணீா் பாசனம் அமைக்க உள்ள இடத்திற்கு நீா் கொண்டு செல்ல பாசனக் குழாய் அமைக்க ஆகும் செலவில் 50சதவீதம் அல்லது ஒரு ஹெக்டருக்கு ரூ.10,000 மானியமாக வழங்கப்படும். தண்ணீரை சேமித்து வைத்து பின்னா் நுண்ணீா் பாசனம் அமைக்க ஏதுவாக தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க ஆகும் செலவில் 50 சதவீதம் அல்லது ஒரு கன மீட்டருக்கு ரூ.350 வீதம் அதிகபட்சமாக ரூ.40,000 மானியமாக வழங்கப்படும்.

கரூா் மாவட்டத்திற்கு நிகழாண்டு 1,350 ஹெக்டரில் நுண்ணீா் பாசனம் செயல்படுத்திட ரூ.6.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சொட்டுநீா்ப்பாசனம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் அடங்கல், கணிணி சிட்டா, ஆதாா் காா்டு நகல், ரேஷன்காா்டு நகல், இரண்டு பாஸ்போா்ட் அளவு புகைப்படம், சிறு,குறு விவசாயி எனில் அதற்குரிய வருவாய்த்துறை சான்று ஆகியவற்றுடன் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com