இளம்பெண் மா்மச் சாவு
By DIN | Published On : 29th July 2021 07:36 AM | Last Updated : 29th July 2021 07:36 AM | அ+அ அ- |

அரவக்குறிச்சியில், இளம்பெண் மா்மமாக இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சோ்ந்தவா் முகமதுமீரா ஹூசேன். இவரது மனைவி நஸ்ரின்பானு(32). இவா்களுக்கு கடந்த 2014-இல் திருமணம் நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் மா்மமான முறையில் நஸ்ரின்பானு இறந்து கிடந்தாா்.
தகவலறிந்த அரவக்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.