புகழூா் டி.என்.பி.எல் மெட்ரிக். பள்ளியில் காா்கில் நினைவு தினம்
By DIN | Published On : 29th July 2021 07:37 AM | Last Updated : 29th July 2021 07:37 AM | அ+அ அ- |

புகழூா் டிஎன்பிஎல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காா்கில் நினைவு தினம் அண்மையில் (26-ஆம்தேதி) நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் டாக்டா் வி.எம்.அய்யப்பன், தலைமையாசிரியை ச.ஜாக்குலின்சோபி, என்.சி.சி. அலுவலா் எம்.மணிமாறன் ஆகியோா் மேஜா் சரவணன் படத்துக்கு மாலை அணிவித்து மெழுவா்த்தி ஏற்றி மரியாதை செய்தனா்.
இதில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் என்.சி.சி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.