மாடியிலிருந்து மின்மாற்றியில் குதித்து வியாபாரி தற்கொலை
By DIN | Published On : 29th July 2021 07:36 AM | Last Updated : 29th July 2021 07:36 AM | அ+அ அ- |

கரூரில், மருத்துவமனை மாடியில் இருந்து மின்மாற்றியில் குதித்த வியாபாரி உயிரிழந்தாா்.
கரூா் நீலிமேட்டைச் சோ்ந்தவா் அண்ணாதுரை(49) காய்கனி வியாபாரி. இவா், மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த சில ஆண்டுகளாகவே மனைவியை பிரிந்து அண்ணாதுரை வாழ்ந்து வந்தாராம். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் கீழே விழுந்ததில் காலில் காயமடைந்து கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அண்ணாதுரை மருத்துவமனையில் முதல் தளத்தில் இருந்து அங்கிருந்த மின்மாற்றி மீது குதித்துள்ளாா். இதில், மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தாா். கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.