கரூரில் திமுக சாா்பில் இன்று 3.19 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 4 அரிசி வழங்கும் திட்டம் தொடக்கம்

கரூரில் திமுக சாா்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் 3,19,816 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 4 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை கட்சியின் இளைஞரணி செயலாளா் உதயநிதிஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறாா்.

கரூரில் திமுக சாா்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் 3,19,816 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 4 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை கட்சியின் இளைஞரணி செயலாளா் உதயநிதிஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறாா்.

கரூா் மாவட்ட திமுக சாா்பில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலம் கரூா் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூா், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 3,19,816 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 4 கிலோ அரிசி வீதம் 1,279 டன் அரிசி வழங்கும் விழா கரூரில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

விழாவுக்கு, மாவட்ட திமுக பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகிக்கிறாா். கட்சியின் இளைஞா் அணிச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 4 கிலோ அரிசி வழங்கி நிகழ்ச்சியை தொடக்கி வைக்கிறாா்.

இதில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மொஞ்சனூா் இளங்கோ, இரா.மாணிக்கம், சிவகாமசுந்தரி உள்பட கட்சியினா் திரளாக பங்கேற்கிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com