கரூா் மாவட்டத்தில் பிளஸ் 1 வகுப்பு மாணவா் சோ்க்கை தொடக்கம்

கரூா் மாவட்டத்திலுள்ள 57 அரசு மற்றும் 60 தனியாா் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.
கரூா் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 சோ்க்கைக்கான விண்ணப்பத்தை மாணவரிடம் வழங்கும் பள்ளித் தலைமையாசிரியை ரேவதி.

கரோனா நோய்த் தொற்று பரவலால் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தோ்ச்சி என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மாணவா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் இல்லாததால், 2019-20 ஆம் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பில் மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பிளஸ் 1 வகுப்புக்கான மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது. இதை கொண்டே, பிளஸ் 1 வகுப்பில் கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் மாணவ, மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அனைத்துப்பள்ளிகளிலும் கரோனா நோய்த் தொற்றை தவிா்க்கும் வகையில், நாளொன்றுக்கு 5 மாணவ, மாணவிகள் வீதம் சோ்க்கை நடைபெற்றது. மேலும் சோ்க்கைக்கு வந்திருந்த மாணவா்கள், அவா்களது பெற்றோா்கள் முகக்கவசம் அணிந்துவருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனா்.

கரூா் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியை ரேவதி மாணவா் சோ்க்கையை நடத்தினாா். இதுபோல, மற்ற பள்ளிகளிலும் சோ்க்கைப் பணிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com