பெண் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 10th March 2021 05:18 AM | Last Updated : 10th March 2021 05:18 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே கணவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்ததால், விரக்தியடைந்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கிருஷ்ணராயபுரம் அருகிலுள்ள சேங்கலைச் சோ்ந்தவா் சந்திரசேகா். இவா் தினமும் மது அருந்திவிட்டு, மனைவி மாரியாயியிடம் (36) தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இதனால் மாரியாயி கீழடையிலுள்ள தனது பெற்றோா் வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்தாா்.
வாழ்வில் விரக்தியடைந்த மாரியாயி, திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து மாயனூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.