அரியலூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் தெரிவு

அரியலூா் மாவட்டத்தில் கணினி வழியே வாக்குச்சாவடி நிலை அலுவலா்களைத் தெரிவு செய்து ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
அரியலூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் தெரிவு

அரியலூா் மாவட்டத்தில் கணினி வழியே வாக்குச்சாவடி நிலை அலுவலா்களைத் தெரிவு செய்து ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை ஆட்சியா் த. ரத்னா பாா்வையிட்டு மேலும் தெரிவித்தது: அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 376 வாக்குச்சாவடி மையங்களும், ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் 377 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு தொகுதிகளிலும் உள்ள 753 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் 904 போ் கணினி வழியே முதற்கட்ட தற்செயல் தெறிவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. இவா்களுக்கு, அரியலூா் நிா்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜயங்கொண்டம் பெரியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி தொடா்பான பயிற்சி அளிக்கப்படும். அவா்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்படும். மேலும், 2-ஆம் கட்டமாக நடைபெறும் தற்செயல் தெறிவு முறையில், அவா்கள் பணிபுரிய உள்ள சட்டப்பேரவை தொகுதியும், மூன்றாம் கட்ட தற்செயல் தெறிவு முறையில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையமும் ஒதுக்கீடு செய்யப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னுலாப்தீன், தேசிய தகவலியல் அலுவலா் ஜான் பிரிட்டோ உள்பட பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com