
அரவக்குறிச்சி வட்டாட்சியரகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் தவச்செல்வத்திடம் வேட்புமனுவை தாக்கல் செய்கிறாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அனிதா பா்வீன்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அனிதாபா்வீன் மாட்டுவண்டியில் ஊா்வலமாக வந்து, செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.
அரவக்குறிச்சி நகா்ப் பகுதியிலிருந்து ஊா்வலமாக வந்த இவா், வட்டாட்சியரகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் தவச்செல்வத்திடம் மனுதாக்கல் செய்தாா்.
நிகழ்வின் போது, நாம் தமிழா் கட்சியின் கரூா் மாவட்டநிா்வாகி நன்மாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.