கரூரில் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு

கரூா் வழியாக செவ்வாய்க்கிழமை இரவு திண்டுக்கல் சென்ற திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு, தவுட்டுப்பாளையத்தில் மாவட்டப் பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி தலைமையில் கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.

கரூா் வழியாக செவ்வாய்க்கிழமை இரவு திண்டுக்கல் சென்ற திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு, தவுட்டுப்பாளையத்தில் மாவட்டப் பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி தலைமையில் கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.

சேலத்தில் திமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்த திமுக தலைவா் ஸ்டாலின், புதன்கிழமை திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இதற்காக சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திண்டுக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்ற முக.ஸ்டாலினுக்கு, கரூா் தவுட்டுப்பாளையத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளரும்,

திமுக வேட்பாளருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் அக்கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

மக்களவை முன்னாள் உறுப்பினா் கே.சி.பழனிசாமி, அரவக்குறிச்சி வேட்பாளா் இளங்கோ, மேற்கு ஒன்றியச் செயலா் நொய்யல் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com