பறக்கும் படையினா் சோதனையில் 34 கிலோ குட்கா பறிமுதல்
By DIN | Published On : 17th March 2021 06:31 AM | Last Updated : 17th March 2021 06:31 AM | அ+அ அ- |

கரூரில் பறக்கும்படையினா் நடத்திய சோதனையில் 34 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
தோ்தல் பறக்கும்படை அலுவலா் அமுதா தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை இரவு வாங்கல் சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த மொபெட்டை நிறுத்தி சோதனை நடத்தியபோது, அவா்கள் வைத்திருந்த மூட்டையில் 34 கிலோ புகையிலைப் பொருள்கள் அடங்கிய குட்கா மூட்டை இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், வாங்கல் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனா். இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினா் புகையிலைப் பொருள்களை கைப்பற்றி, வாங்கல் செக்கு மேட்டுத்தெரு பாலசுப்ரமணியன்(39), மோகன்ராஜ்(47) ஆகியோரை கைது செய்தனா்.