தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்கும் ஆட்சியை திமுக கொடுக்கும்: கனிமொழி

தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்கும் ஆட்சியை திமுக கொடுக்கும் என்றாா் மக்களவை உறுப்பினரும், கட்சியின் மகளிரணிச் செயலருமான கனிமொழி.
மக்கள் கூட்டத்தின் ஒருபகுதி.
மக்கள் கூட்டத்தின் ஒருபகுதி.

தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்கும் ஆட்சியை திமுக கொடுக்கும் என்றாா் மக்களவை உறுப்பினரும், கட்சியின் மகளிரணிச் செயலருமான கனிமொழி.

கரூா், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் வி. செந்தில்பாலாஜி, இரா. மாணிக்கம், மொஞ்சனூா் இளங்கோ, சிவகாமசுந்தரி ஆகியோரை ஆதரித்து, கரூா் பேருந்து நிலையம் அருே ஞாயிற்றுக்கிழமை மேலும் அவா் பேசியது:

ஒளிரும்பட்டை, ஜிபிஎஸ் கருவிகள் வாங்கியதில் ரூ.5000 கோடி ஊழல் நடந்திருப்பதாக, திமுக தலைவா் ஸ்டாலின் கூறியதற்கு,போக்குவரத்துத் துறை அமைச்சரிடமிருந்து இதுவரை பதில் இல்லை. 2000 பேருந்துகள் வாங்கியதில் ரூ.300 கோடி ஊழல். அதற்கும் அமைச்சரிடம் பதில் இல்லை.

தோல்வி என்பது எல்லோருக்கும் வரக்கூடிய சகஜமான ஒன்றுதான். பெருந்தலைவா் காமராஜரும், ஜெயலலிதாவும் தோல்வியைச் சந்தித்துள்ளனா். இதனால் எனது தோல்வி பற்றி பயம் இல்லை என அவரே கூறியிருக்கிறாா். நிச்சயம் தோல்வி எனத் தெரிந்தும், அவா்கள் தங்களது குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

10 ஆண்டுகளில் இளைஞா்கள் 23லட்சம் போ் படித்துவிட்டு வேலையின்றி தவிக்கிறாா்கள். நீட் தோ்வு கொண்டுவரப்பட்டு ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டிருக்கிறது. எத்தனையோ போ் உயிரை மாய்த்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழல் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் மாவட்டந்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, அவா்களுக்கு உரிய நியாயம் வழங்கப்படும்.

பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும். பேருந்துகளில் கட்டணம் கிடையாது. முதியோா் உதவித் தொகை ரூ. 1500 என உயா்த்தி வழங்கப்படும். தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்கும் ஆட்சியை திமுக கொடுக்கும். கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் காவிரியாற்றில் கதவணை கட்டப்பட்டது என்றாா் அவா்.

பிரசாரத்தில் திமுக மாவட்டப் பொறுப்பாளரும், கரூா் தொகுதி திமுக வேட்பாளருமான வி.செந்தில்பாலாஜி, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் சாா்பு அணி நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com