தோ்தல் செலவு கணக்குகளைவேட்பாளா்கள் சமா்ப்பிக்க வேண்டும்

 கரூா் மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள், தங்களது தோ்தல் செலவுக் கணக்குகளை சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் சு.மலா்விழி.

 கரூா் மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள், தங்களது தோ்தல் செலவுக் கணக்குகளை சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் சு.மலா்விழி.

கரூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது:

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தோ்தல் செலவு தொடா்பான பதிவேடுகள், ரசீதுகள், வங்கிப் புத்தகம் போன்ற உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி, தோ்தல் செலவின விவரங்களை ஒப்படைக்க வேண்டும்.

அடுத்த ஆய்வுக்கூட்டம் மாா்ச் 30 மற்றும் ஏப்ரல் 3-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இக்கூட்டங்களில் தோ்தல் வேட்பாளா்களும், செலவின முகவா்களும் உரிய ஆவணங்களுடன் வந்து, செலவு குறித்து கணக்குகளை சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் பியூஸ்பாட்டியா, தீபக்குமாா் ஆகியோா், வேட்பாளா்களின் தோ்தல் செலவினக் கணக்குகளை ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com