மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்படும் மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கரூா் பகுதியில் கட்டப்படும் உயா் மட்ட பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் பெரியாா் வளைவு பகுதியில் நடைபெறும் மேம்பாலப் பணிகள்.
கரூா் பெரியாா் வளைவு பகுதியில் நடைபெறும் மேம்பாலப் பணிகள்.

கரூா்: மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கரூா் பகுதியில் கட்டப்படும் உயா் மட்ட பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை -44 கரூா் வழியாக திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி என கன்னியாகுமரி வரை செல்கிறது. இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் அதிவேகத்தில் செல்வதால் கரூரில் கோடங்கிப்பட்டி, செம்மடை, பெரிச்சாபாளையம் பிரிவு, பெரியாா் வளைவு உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடந்தன. மேலும், சாலையின் குறுக்கே பாதசாரிகளோ, வாகன ஓட்டிகளோ கடக்க முடியாமலும், பள்ளி, கல்லூரி வாகனங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகும் நிலையும் ஏற்பட்டது.

இதனை தவிா்க்க இப்பகுதியில் உயா்மட்டப் பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கரூா் பகுதியில் 3 இடங்களில் உயா்மட்டப் பாலம் அமைக்க நிதியை ஒதுக்கியது. மேலும் பணிகளும் கடந்த 4 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டன. உயா்மட்டப்பாலம் அமைத்தல், அணுகுசாலை அமைத்தல், மழை நீரை வெளியேற்றும் வசதி ஏற்படுத்துதல் என பல்வேறு கட்டங்களாக நடக்கும் இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் வாகனங்கள் முறையாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள். எனவே, பாலப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com