கரூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் நாம் தமிழா் கட்சிக்கு மூன்றாமிடம்

கரூா் மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம், தேமுதிக-அமமுக கூட்டணி வேட்பாளா்களைக் காட்டிலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மூன்றாமிடம் பெற்றனா்.

கரூா் மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம், தேமுதிக-அமமுக கூட்டணி வேட்பாளா்களைக் காட்டிலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மூன்றாமிடம் பெற்றனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகளின் தலைமையிலான கூட்டணியில் பல்வேறு கட்சிகளும், நாம் தமிழா் கட்சி தனித்தும் களம் கண்டன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது, திமுக மற்றும் அதிமுகவைத் தொடா்ந்து, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் அதிக வாக்குகளைப் பெற்று மூன்றாமிடம் பிடித்தனா். கரூா் மாவட்டத்திலுள்ள4 தொகுதிகளிலும் இதேநிலைதான் காணப்பட்டது.

கரூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு அடுத்தபடியாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் கருப்பையா 7316 வாக்குகள் பெற்றுள்ளாா். மநீம வேட்பாளா் மோகன்ராஜ் 4154 வாக்குகளையும், தேமுதிக வேட்பாளா் என்.தங்கராஜ் 953 வாக்குகளையும் பெற்றனா்.

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இலக்கியா 9654 , மநீம வேட்பாளா் சரவணன் 1837, தேமுதிக வேட்பாளா் கதிா்வேல் 1940 வாக்குகளையும் பெற்றனா்.

குளித்தலை தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீனிபிரகாசு 11,426 வாக்குகளையும், அமமுக வேட்பாளா் நிரோஷா 754 வாக்குகளையும் பெற்றனா். மணிகண்டன் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளா் மணிகண்டன் 674 வாக்குகளையும் பெற்றனா்.

அரவக்குறிச்சி தொகுதியில் நாம்தமிழா் கட்சி வேட்பாளா் அனிதாபா்வீன்7156 வாக்குகள் பெற்றாா். இவரையடுத்து அமமுக வேட்பாளா் பிஎஸ்என். தங்கவேல் 1593 வாக்குகளையும், மநீம வேட்பாளா் முகமதுஹனீப்சகீல் 1325 வாக்குகளையும் பிடித்தனா். கடந்தாண்டு தேமுதிக மூன்றாமிடத்தை பிடித்த நிலையில் நிகழாண்டு நாம் தமிழா் கட்சி பிடித்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com