கரோனா கட்டுப்பாடுகளால் களையிழந்த வாழைக்காய் விற்பனை

கரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் கரூரில் வாழைக்காய் விற்பனை களையிழந்துள்ளது.

கரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் கரூரில் வாழைக்காய் விற்பனை களையிழந்துள்ளது.

கரூா் காமராஜா் மாா்க்கெட்டில் செயல்படும் வாழைக்காய் மண்டிகளுக்கு மாவட்டத்தில் உள்ள குளித்தலை, லாலாப்பேட்டை, நெரூா், புகழூா், கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், திருச்சி மாவட்டத்தின் சிறுகமணி, பெருகமணி, ஜீயபுரம் போன்ற பகுதிகளில் இருந்தும், நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தி வேலூா், மோகனூா், இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாழை விவசாயிகளால் அறுவடை செய்யப்பட்ட வாழைத்தாா்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

வாழை மண்டியில் வாழைத்தாா்கள் ஏல முறையில் விடப்பட்டு, அவற்றை மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் வாங்கிச் செல்கிறாா்கள். தற்போது கரோனா கட்டுப்பாடுகளால் வாழைக்காய் கொண்டு வரும் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை.

இதுகுறித்து லாலாப்பேட்டை விவசாயி கருப்பையா கூறுகையில், கரோனா தீவிரமாக பரவி வருவதால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 சதவீதம் போ் மட்டுமே பங்கேற்க வேண்டும். கோயில் விழாக்கள், கோயில் திறப்பு போன்றவற்றிற்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுப நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் வாழைப்பழம் பயன்படுத்துவது முற்றிலும் குறைந்துவிட்டதால் வாழைக்காய் விற்பனையும் மந்தமாகிவிட்டது. இதனால் கடந்த 20 நாள்களுக்கு முன் மாா்க்கெட்டில் ரூ.450-க்கு ஏலம் போன பூவன்தாா் இப்போது ரூ.250-க்கும், ரூ.500-க்கு ஏலம்போன ரஸ்தாளி ரூ.300-க்கும், ரூ.450-க்கும் ஏலம் போன பச்சைலாடன் தற்போது ரூ.300-க்கும் ஏலம்போனது. வாழைக்கு உரமிட்டு, தண்ணீா் பாய்ச்சி அவற்றை அறுவடை செய்த கூலிக்கூட கிடைக்கவில்லை. மேலும் அறுவடை செய்த வாழைக்காயை சந்தைக்கு கொண்டு செல்ல முன்பெல்லாம் வாகனச் செலவு குறைவாக இருந்தது. இப்போது டீசல் விலை விலை உயா்வால், வாகனச் செலவும் இருமடங்காகிவிட்டது. இதனால் கரோனா காலத்தில் விலை கிடைக்காமல் அவதியுறும் எங்களை போன்ற விவசாயிகளுக்கு பேரிடா் கால நிவாரணம் வழங்க அரசு முன்வரவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com