படித்த இளைஞா்கள்வேலைவாய்ப்பு பெற கடனுதவிகரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 11th May 2021 12:57 AM | Last Updated : 11th May 2021 12:57 AM | அ+அ அ- |

கரூா்: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழிற் திட்டங்களுக்கு அதிகபட்சம் ரூ.15 லட்சமும் சேவை மற்றும் வியாபாரத் தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை சுய தொழில் செய்ய வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெறலாம் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது பொது பிரிவினருக்கு 35-மும், சிறப்புப் பிரிவினருக்கு (ஆதி திராவிடா், பழங்குடியினா், மகளிா், சிறுபான்மையினா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையா்) 45 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கடன் பெறுபவா்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25சதவீதம், அதிகபட்சம் ரூ. 2.50 லட்சம் வரை அரசு மானியமாக வழங்குகிறது.
கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் செப்.30-ஆம்தேதி வரை விண்ணப்பிக்கும் பயனாளிகள் நோ்முகத்தோ்வு இன்றி கடன் விண்ணப்பம் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவதுடன் கட்டாய தொழில் முனைவோா் பயிற்சி பெறுவதிலிருந்தும் விலக்கு அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.
கரூா் மாவட்டத்தை சாா்ந்த ஆா்வமுள்ள தொழில் முனைவோா்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற ரரர.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்7ன்ஹ்ங்ஞ்ல் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்து உரிய ஆவணங்களுடன் பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், தாந்தோணிமலை, கரூா் அவா்களுக்கு விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.