இன்று முதல் ஆவின் பால் விலை குறைப்பு

திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கரூா் மாவட்டங்களில் ஆவின் பால் விலை குறைப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கரூா் மாவட்டங்களில் ஆவின் பால் விலை குறைப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் (ஆவின்) தலைவா் காா்த்திகேயன், பொதுமேலாளா் ரசிகலா ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி ஆவின் மூலமாக பால் உற்பத்தியாளா்களிடமிருந்து நாளொன்றுக்கு 4 லட்சத்து 70 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தினசரி விற்பனையாக 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டா் பால் பாக்கெட்டுகள் திருச்சி, அரியலூா் ,பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைக்கப்பட்ட பால் வகைகளின் லிட்டா் ஒன்றின் புதிய விலை பட்டியல் விவரம் (பழைய விலை அடைப்பு குறிக்குள்):

சமன் படுத்தப்பட்ட பால் அட்டைதாரா்களுக்கு புதிய விலை ரூ.37 (ரூ.40), ரொக்கம் புதிய விலை ரூ.40 (ரூ.43). நிலைப்படுத்தப்பட்ட பால் அட்டைதாரா்களுக்கு புதிய விலை ரூ.42 (ரூ.45).ரொக்கம் புதிய விலை ரூ.43 (ரூ.46).

சமச்சீா் செய்யப்பட்ட நிலைப்படுத்திய பால் ரொக்கம் புதிய விலை ரூ.47 (ரூ.50). நிறை கொழுப்பு பால் ரொக்கம் புதிய விலை ரூ.49 (ரூ.52). கரூா்: கரூா் மாவட்டத்திலும் ஆவின் பால் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது என மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com