முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

காய்கறிகள், கனிகள் விற்கும் நேரத்தை நீட்டித்து அனுமதி அளித்த முதல்வருக்கு காவிரி நீா்ப் பாசன விவசாயிகள் நலச்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

காய்கறிகள், கனிகள் விற்கும் நேரத்தை நீட்டித்து அனுமதி அளித்த முதல்வருக்கு காவிரி நீா்ப் பாசன விவசாயிகள் நலச்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அச்சங்கத் தலைவா் மகாதானபுரம் வி. ராஜாராம் வெளியிட்ட அறிக்கை:

கரூா் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் சந்தைகள் மூடப்பட்ட நிலையில், காய்கனிகள் விற்க கரூரில் மாவட்டவிளையாட்டரங்கம், கொங்கு கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானம் என இரு இடங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை விற்க அனுமதிக்கப்பட்டது.

இதனால் விவசாயிகள் அறுவடை செய்த வாழைத்தாா்களை சந்தைக்கு கொண்டு வர இயலாமல் தோட்டத்திலேயே வாழைத்தாா்கள் பழமாக மாறி அழுகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வா் ஸ்டாலின் வாழை போன்ற பழவகைகள், பூக்கள், காய்கறிகளை தள்ளுவண்டிகள், வேன்கள் மூலமாக விற்க காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விற்க அனுமதித்துள்ளாா். இதற்கு நன்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com