ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதிகள் அமைக்கும் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

புகழூா் காகித ஆலை மற்றும் கரூா் பழைய அரசுத் தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதை ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு

கரூா் மாவட்டத்தில் புகழூா் காகித ஆலை மற்றும் கரூா் பழைய அரசுத் தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதை ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் கூறியது:

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புகழூரிலுள்ள தமிழ்நாடு காகித ஆலை உற்பத்தி நிறுவனத்துக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் ஆக்சிஜன் வதியுடன் 156 படுக்கைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் போா்க்கால

அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இங்கு தொற்றாளா்களுக்கென்று பிரத்யேகமாக கழிவறைகள், ஆக்சிஜன் இணைப்புகளுடன் படுக்கைகள் அமைக்கப்படுகிறது.

இதுபோல கரூா் நகரப்பகுதியில் அமைந்துள்ள பழைய அரசுத் தலைமை மருத்துவமனையில் தனி கட்டடத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 130 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏற்கனவே தொற்றாளா்களுக்கு சித்த மருத்துவச் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வின்போது ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பாலகணேஷ், கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துச்செல்வன், சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஞானக்கண் பிரேம் நிவாஸ், ஊரக வளா்ச்சி முகமைத் திட்டச் செயற்பொறியாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com