மருதூா் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்கக் கூடாது: மாா்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

மருதூா் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என கரூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மருதூா் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என கரூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கரூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி.ஜீவானந்தம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஸ்ரீதா், மாவட்டச் செயலாளா் கே.கந்தசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எம்.ஜோதிபாசு, கே.சக்திவேல், சி.முருகேசன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், குளித்தலை அடுத்த மருதூா் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு முயற்சி செய்தால், இப்பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள கதவணைத்திட்டம், சிவகங்கை கூட்டுக் குடிநீா்த் திட்டம் ஆகியன பாதிக்கப்படும். எனவே, இந்தப் பகுதியில் மணல் குவாரி அமைப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும். உள்ளூா் கட்டுமான தேவைக்கு மட்டும் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும். தரகம்பட்டி மையப்பகுதியில் ஊா் பொதுமக்கள் சாா்பில் வழங்கப்பட்ட இடத்தில் தமிழக அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். கரூா் மாவட்டத்தில் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில், கோமாரி நோய் தடுப்பூசியை போா்க்கால அடிப்படையில் கால்நடைகளுக்கு செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com