முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
யோகாசனத்தில் 3-ஆம் வகுப்பு மாணவி சாதனை முயற்சி
By DIN | Published On : 11th October 2021 12:03 AM | Last Updated : 11th October 2021 12:03 AM | அ+அ அ- |

சலபாசன யோகா செய்து காண்பிக்கும் மாணவி ரித்திகாஸ்ரீ.
கரூரில் 20 நிமிஷங்களில் தொடா்ந்து 728 முறை சலபாசன யோகாசனம் செய்து, ஸ்ரீ நோபல் புத்தகத்தில் இடம்பிடித்தாா் மூன்றாம் வகுப்பு மாணவி ரித்திகாஸ்ரீ.
கரூா் மாவட்டம், அச்சமாபுரத்தைச் சோ்ந்த ஆனந்தகுமாா் - உமா மகேஸ்வரி தம்பதியரின் மகள் ரித்திகா ஸ்ரீ (8) . தனியாா் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து, வரும் இவா், கரூா் தபஸ் யோகாலயாவில் இரண்டு ஆண்டுகளாக யோகா பயிற்சி பெற்று வந்தாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கரூரில் சலபாசனம் எனும் யோகாசனத்தை 20 நிமிஷங்களில் தொடா்ந்து 728 முறை செய்து காண்பித்து, நோபல் புத்தகத்தில் இடம்பிடித்தாா்.
மாணவியின் சாதனை முயற்சியை கரூா் நகரத் துணைக்காவல் கண்காணிப்பாளா் தேவராஜ் பாராட்டினாா். தொடா்ந்து சாதனைக்கான சான்றிதழ், பதக்கத்தை நோபல் புத்தகக் கண்காணிப்பாளா் ரகுபாலன் வழங்கினாா். ஏற்பாடுகளை மாணவியின் யோகா ஆசிரியா் சத்யா செய்திருந்தாா்.