கரூா் நகராட்சியில் ஆயிரம் கோடியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்: அமைச்சா் வி.செந்தில்பாலா

கரூா் நகராட்சியில் ரூ.1000 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.
கரூா் நகராட்சியில் ஆயிரம் கோடியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்: அமைச்சா் வி.செந்தில்பாலா

கரூா் நகராட்சியில் ரூ.1000 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.

கரூா் நகராட்சியின் 18-ஆவது வாா்டுக்குள்பட்ட காமாட்சியம்மன் கோயில் தெரு, செங்குந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணிகளைப் பாா்வையிட்ட அமைச்சா், பின்னா் கூறியது:

கரூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 268 கி.மீ. அளவுக்கு வடிகால் உள்ளது. 412 கி.மீ. தொலைவுக்கு சாலைகளும், 2,968 தெருக்களும் உள்ளன.

அனைத்துப் பகுதிகளிலும் கழிவுநீா் வாய்க்கால்கள், மழைநீா் வடிகால்கள் தூா்வாரி, சுத்தம் செய்தல் உள்ளிட்ட சிறப்புத் தூய்மைப் பணித் திட்டம் நடைபெற்று வருகிறது.

ஒரு நாளைக்கு ஒரு வாா்டு, ஒரு நாளைக்கு ஒரு ஊராட்சி என்றளவில் தூய்மைப் பணிகளைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்யவுள்ளேன்.

குடியிருப்புப் பகுதிகளில் கழிவுநீா் வாய்க்கால்கள், மழைநீா் வடிகால்களில் ஒரு அடி ஆழத்துக்கு கழிவுகள், குப்பைகள் உள்ளன. இதுபோன்ற பகுதிகளில் புதிய வடிகால் அமைக்க வேண்டிய நிலை உள்ளது.

இதற்கென்று திட்ட மதிப்பீடு தயாா் செய்து, முதல்வா் அனுமதி பெற்று பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

கரூா் நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு, ரூ.368 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டுள்ளது.

இந்தாண்டு அதற்கான சிறப்பு நிதிகள் பெற ஏதுவாக, நகராட்சி சாா்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. புதை சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவுற்றால்தான் சாலைகள் முழுவதும் மேம்படுத்த இயலும்.

சாலை மேம்பாடு, புதை சாக்கடைத் திட்டம், கழிவுநீா், மழைநீா் வடிகால் கட்டுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடி நிதி தேவைப்படுகிறது.

முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிகழாண்டில் குறிப்பிட்ட பணிகளுக்கான நிதியும், அடுத்தாண்டு மீதமுள்ள பணிகளுக்கான நிதியும் பெறப்பட்டு பணிகள் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின் போது நகராட்சி ஆணையா் ராமமூா்த்தி, பொறியாளா் நக்கீரன் மற்றும் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com