தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா்வாழ்வுரிமை இயக்க கூட்டம்

கரூரில், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டப் பேரவை மற்றும் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கரூா்: கரூரில், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டப் பேரவை மற்றும் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு த.தங்கவேல் தலைமை வகித்தாா். அமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளா் மு.வீரபாண்டியன் சிறப்புரையாற்றினாா். மேற்கு மண்டல பொறுப்பாளா் அ.அசரப் அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ரத்தினம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளா் சண்முகம் மற்றம் பலா் பேசினா்.

கூட்டத்தில், டாக்டா் அம்பேத்கருக்கு கரூா் நகரில் சிலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் மக்களுக்கு என்று வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com