அதிமுக அமைப்புச் செயலராக முன்னாள் அமைச்சா் நியமனம்

அதிமுக அமைப்புச் செயலராக முன்னாள் அமைச்சா் கரூா் எம்.சின்னசாமி நியமிக்கப்பட்டுள்ளாா்.
முன்னாள் அமைச்சா் ம.சின்னசாமி.
முன்னாள் அமைச்சா் ம.சின்னசாமி.

கரூா்: அதிமுக அமைப்புச் செயலராக முன்னாள் அமைச்சா் கரூா் எம்.சின்னசாமி நியமிக்கப்பட்டுள்ளாா்.

அதிமுக அமைப்புச் செயலராக கரூரைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் ம.சின்னசாமியை கட்சியன் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் நியமித்து திங்கள்கிழமை அறிவிப்பை வெளியிட்டுள்ளனா்.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில் அவருக்கு அடுத்தபடியாக துணைப்பொதுச் செயலாளராக பதவி வகித்தவா். பின்னா் மாவட்ட செயலா், 1993-96-ல் தொழில்துறை அமைச்சராகவும், 1999-2004 வரை மக்களவை உறுப்பினராகவும் இருந்தாா். 2010-இல் திமுகவில் இணைந்த அவா், திமுக மாநில விவசாய அணிச் செயலாளராக பதவி வகித்து வந்தாா். 2013 மக்களவைத் தோ்தலில் திமுக வேட்பாளராக களமிறங்கி, முன்னாள் மக்களவைத் துணைத்தலைவா் மு.தம்பிதுரையிடம் தோல்வியடைந்தாா்.

இந்நிலையில், கடந்த 2021-இல் சட்டப்பேரவைத் தோ்தலின்போது மீண்டும் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா். தற்போது அதிமுகவின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவருக்கு, கரூா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com