நெகிழிப் பொருள்கள் தவிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம், வீரப்பட்டி ஊராட்சியில் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களைத் தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
வீரப்பட்டியில் நடந்த தூய்மை பாரதம் விழாவில் நெகிழிப் பொருள்களைத் தவிா்ப்போம் என உறுதிமொழியை எடுத்துக்கொண்ட பொதுமக்கள்.
வீரப்பட்டியில் நடந்த தூய்மை பாரதம் விழாவில் நெகிழிப் பொருள்களைத் தவிா்ப்போம் என உறுதிமொழியை எடுத்துக்கொண்ட பொதுமக்கள்.

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம், வீரப்பட்டி ஊராட்சியில் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களைத் தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தாய்மை நண்பா்கள், இளைஞா் நற்பணி மன்றம் மற்றும் நேரு இளையோா் மன்றம் இணைந்து தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், நெகிழி(பிளாஸ்டிக்) பொருள்களால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நெகிழி உபயோகிப்பைத் தவிா்ப்பது குறித்த உறுதிமொழியை விழாவில் பங்கேற்றவா்கள் எடுத்துக்கொண்டனா்.  இதில் வீரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் அழகுபாண்டியன், கிராம நிா்வாக அலுவலா் ராமா், ஊராட்சி செயலா் முருகேசன் மற்றும் தூய்மை பணியாளா்கள், ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் இணைந்து சுமாா் 33 கிலோ நெகிழி பொருள்களைச் சேகரித்தனா். தேசிய தன்னாா்வலா் முத்துமாரி வரவேற்றாா். மணிகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com